மேட்டுப்பாளையம்,ஜன.4: மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரமடை,அன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அந்தந்த காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் போலீசாரின் உதவியுடன் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.இதில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சோதனையிடப்பட்டன.
தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை இயக்கியது.சீட் பெல்ட் அணியாதது,உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கியது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை ஏற்றியது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டனர். பின்னர்,அவர்களை கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர்(நடமாடும் நீதிமன்றம்) நீதிமன்றம் – 2 ல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தி உடனடியாக ஸ்பாட் பைன் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதன்படி காரமடையில் 39 பேர்,அன்னூரில் 12 பேர், மேட்டுப்பாளையத்தில் 8 பேர் என மொத்தமாக 59 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post வாகன சோதனையில் சிக்கிய 59 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.