சென்னை: சுயவிளம்பரத்திற்காக நாள்தோறும் போராட்டங்களை நடத்துகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். போராட்டங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எந்த அடக்குமுறையும் செய்யப்படுவதில்லை. மக்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர் என்றும் குற்றசாட்டு வைத்தார்.