மேலும், பொதுவிநியோக அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகத்தின் நிலையினை மாநிலம் முழுவதும் கண்காணித்து, உடனுக்குடன் குறித்த காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்துப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும் கூறினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பொங்கல் பரிசுத் தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.