இதைத்தொடர்ந்து, இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளார்.
The post பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்று முதல் வீடு வீடாக விநியோகம்: ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குகின்றனர் appeared first on Dinakaran.