பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி இன்றைக்கு தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை நேற்று திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
பெண்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்களுடைய முன்னேற்றத்துக்காகவும் ஏராளமான திட்டங்களை இன்றைக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு நிறைவேற்றி கொண்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி… இப்படி ஒவ்வொரு திட்டமும் பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும், பெண்கள் நல்ல வேலைகளுக்கு போகவேண்டும், பெண்கள் அதிகாரத்தில் சென்று அமரவேண்டும், பெண்கள் உலக அறிவு பெறவேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி இன்றைக்கு தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். இந்த சைதை தொகுதியில், கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்படுகிறது. ‘நேச்சுரல்ஸ்’ மூலமாகவும், ‘உஷா’ நிறுவனம் மூலமாகவும் மகளிருக்கு திறன் பயிற்சி கிடைக்கப் போகிறது.

கொளத்தூர் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியை போல இந்த கலைஞர் திறன் மேம்பாட்டு மையத்திலும் Tally பயிற்சி வழங்கப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு ஆண்டும் 2000 பேருக்கு இந்த பயிற்சிகளை தந்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு அடி முன்னேறி நிற்க அமைச்சர் மா.சு. இன்றைக்கு உதவியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: