×

டெஸ்ட் அணியில் இருந்து ரோகித்சர்மாவை நீக்ககூடாது: ஆஸி. மாஜி கேப்டன் மைக்கேல் கிளார்க் சொல்கிறார்

மும்பை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படக்கூடாது என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவின் செயல்பாடு மிகவும் மோசமான வகையில் உள்ளது. நடப்பு ஆஸ்திரேலியா தொடரில் அவர் 5 இன்னிங்ஸ் விளையாடி 31 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ரோகித் சர்மா மூன்று தொடர்களிலும் சேர்த்து 164 ரன்கள் அடித்திருக்கிறார். இது அவருடைய பேட்டிங் சராசரி 10 என்ற அளவில் இருக்கின்றது. இதனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில், 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்துது. இதனால் ரோகித் சர்மா நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் மாஜி கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், “ரோகித் சர்மாவின் கடைசி 10 இன்னிங்ஸ் டெஸ்ட் ஸ்கோரை பார்த்தால் கவனிக்கும் வகையில் இருக்கின்றது. பல வீரர்கள் இதுபோல் ஒரு சரிவை சந்தித்துள்ளார்கள். சிலர் கேப்டன் என்பதால் தப்பித்து இருக்கிறார்கள். மற்ற சிலருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. எனினும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்ற முடிவை ரோகித் சர்மா விடமே விட்டுவிட வேண்டும். ஒரு கேப்டனாக அந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார்.

ஒரு அணியை வழிநடத்தும் போது கூடுதல் வாய்ப்பு கேப்டனுக்கு வழங்கப்படும். நிச்சயமாக ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஸ்கோர்கள் பெரிய அளவில் இல்லை. எனினும் சிட்னி டெஸ்ட் போட்டி அவருக்கு கடைசியாக இருக்காது என்று நினைக்கின்றேன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து ரோகித் சர்மா என்ன முடிவை எடுத்திருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை கேப்டன் பதவியில் இருந்து போவாரா என்றும் சொல்ல முடியாது’’ என்றார்.

The post டெஸ்ட் அணியில் இருந்து ரோகித்சர்மாவை நீக்ககூடாது: ஆஸி. மாஜி கேப்டன் மைக்கேல் கிளார்க் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : ROKITSARMA ,AUSSIE ,Maggie ,Michael Clarke ,MUMBAI ,MICHAEL CLARK ,ROKIT SHARMA ,INDIAN TEST CRICKET ,Australia ,Dinakaran ,
× RELATED இந்தியா – ஆஸி டெஸ்ட் இழுபறி திக்…...