×

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 181 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்

சிட்னி: சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் வெப்ஸ்டர் 57, ஸ்டீவன் ஸ்மித் 33 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 3, நிதிஷ்குமார், பும்ரா, தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். காயத்தால் போட்டியின் நடுவே இந்திய கேப்டன் பும்ரா வெளியேறியதால் விராட் கோலி தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி 4 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்குகிறது.

The post சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 181 ரன்னில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் appeared first on Dinakaran.

Tags : Sydney Test Cricket Match ,Australia All ,Sydney ,Sydney Test ,Jacob Webster ,Steven Smith ,Siraj ,Prasit Krishna Dala ,Australia ,Dinakaran ,
× RELATED சிட்னி டெஸ்ட்: இந்தியா 185 ரன்னுக்கு ஆட்டமிழப்பு