×

தேசிய பீச் வாலிபால் போட்டி: தருவைகுளம் அரசு பள்ளி மாணவி சாதனை


குளத்தூர்: தேசிய அளவிலான பீச் வாலிபால் போட்டியில் தருவைகுளம் அரசு பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கன்னியாகுமரியில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் நடத்தப்பட்ட பீச் வாலிபால் மாநில அளவிலான தேர்வு போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அந்தோணிவர்ஷினி சிறப்பிடம் பிடித்துள்ளார். தமிழக அணிக்கு தேர்வான அந்தோணிவர்ஷினி ஒடிசா மாநிலம் பூரி நகரில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் தேசிய அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

தேசிய அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி அந்தோணிவர்ஷினி, பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரவிகாந்த், முத்துராஜன், பயிற்சியில் உதவிய சூசைஸ்நோசன் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் அண்டோரூபன், உதவி தலைமை ஆசிரியர் சுமதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

The post தேசிய பீச் வாலிபால் போட்டி: தருவைகுளம் அரசு பள்ளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : NATIONAL BEACH VOLLEYBALL TOURNAMENT ,DARUVAIKULAM GOVERNMENT SCHOOL ,Kulathur ,Volleyball ,Sports Group of Indian Schools ,Kanyakumari ,National Beach Volleyball Match ,Daruwaikulam Government School Student ,Dinakaran ,
× RELATED டூவீலர் மீது டிராக்டர் மோதி 2 பெண்கள் படுகாயம்