தேஜஸ்வி சூர்யா – சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமணம் வருகிற மார்ச் 4ம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது. தேஜஸ்வி சூர்யாவின் வருங்கால மனைவி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், கர்நாடக இசைப் பாடகர் மட்டுமின்றி பரதநாட்டிய கலையும் பயின்றவர் ஆவார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உயிர் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்ஏ பட்டமும், சென்னை சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களிலும் மிகவும் பிரபலமான அவரை, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்கிறார்கள். பொன்னியின் செல்வன்- 2 திரைப்படத்தின் கன்னட பதிப்பிற்கு தனது குரலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் அரசியல் மற்றும் கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த திருமண செய்தி குறித்து தேஜஸ்வி சூர்யா அதிகாரப்பூர்வமாக எதுவும்தெரிவிக்கவில்லை.
The post கர்நாடக பாஜ எம்பி தேஜஸ்வி சூர்யா பாடகியுடன் திருமணம் appeared first on Dinakaran.