இதன் மூலம் நீதிபதிகள் நியமனங்களில் தகுதிக்கு பதிலாக குடும்பத்தினருக்கு முன்னுரிமை தரப்படுகிறது என்கிற பொதுவான கண்ணோட்டம் மாறும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், நீதிபதியின் உறவினர் என்ற ஒரே காரணத்தால் தகுதியான நபர்கள் வாய்ப்பை இழக்க நேரிடும் என்றும் கருத்து தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கொலீஜியத்தின் பரிசீலனைக்கு பிரபல வழக்கறிஞரும், காங்கிரஸ் எம்பியுமான அபிஷேக் சிங்வி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், ‘‘இது உண்மை என்றால், உச்ச நீதிமன்ற கொலீஜியம் தனது பரிசீலனையை உடனடியாக செய்து அதை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
நீதித்துறை நியமனங்களில் யதார்த்தம் என்பது உண்மையில் நினைப்பதை விட முற்றிலும் மோசமாக உள்ளது. நீதிபதிகளின் உறவினர்கள், குடும்பவம்சாவளியினர் போன்றவர்களால் மற்றவர்கள் மனச்சோர்வடைந்து நீதித்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதை சொல்வதை விட செய்வது மிகவும் கடினம். இதுவரையிலும் வழக்கறிஞராக உள்ள ஒருவரின் உறவினர்கள் அதே நீதிமன்றத்தில் பயிற்சி செய்யக் கூடாது என்கிற விதிமுறை நீதிபதிகளின் உறவினர்களுக்கு பொருந்துவதில்லை ’’ என்றார்.
The post உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உறவினர்களுக்கு பதவி கிடையாது: கொலீஜியம் திட்டத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு appeared first on Dinakaran.