×

புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்பிக்கள்

சென்னை:ஆங்கில புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை முகாம் அலுவலகத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,கேகேஎஸ் எஸ்ஆர். ராமச்சந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன். சி.வெ.கணேசன், பி.கே.சேகர்பாபு, செந்தில்பாலாஜி, மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ராஜ கண்ணப்பன், கயல்விழி, டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, து.மு.கதிர்ஆனந்த், தே.மலையரசன், அருண்நேரு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதேபோன்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ரெ.தங்கம் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் முதல்வரை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றனர்.

The post புத்தாண்டையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள், எம்பிக்கள் appeared first on Dinakaran.

Tags : New Year ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,English New Year ,Ministers ,Durai Murugan ,K.N. Nehru ,E.V. Velu ,Thangam Thennarasu ,K.K.S. SR. Ramachandran ,M.R.K. Panneerselvam ,Periyakaruppan ,Tha.Mo.Anparasan. ,C.V. Ganesan ,P.K. Sekarbabu ,Senthilbalaji ,Moorthy ,Anbil Mahesh Poyyamozhi ,Raja Kannappan ,Kayalvizhi ,
× RELATED ஆங்கில புத்தாண்டு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து