கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் ஆலையில் சுவர் இடிந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளர்கள் உயிழந்தனர். சுவர் சரிந்ததில் காயம் அடைந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரெகேசன் (29), சனார்மான்ஜி (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காணியாலாம்பாளையத்தில் தனியார் ஆலை கட்டுமான பணியில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். ஜேசிபி மூலம் சுவர்களுக்கு இடையே மணல் தள்ளப்பட்ட போது, புதிதாக கட்டப்பட்ட சுவர் 2 பேர் மீது சரிந்து விழுந்தது.
The post பொள்ளாச்சி அருகே சுவர் இடிந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளிகள் பலி..!! appeared first on Dinakaran.