×

ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..!!

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவ.30-ம் தேதி கரையை கடந்தது. பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகள், விவசாய நிலங்கள் சேதமடைந்தது. புயல், வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Fengel ,Chennai ,Government of Tamil Nadu ,Storm Fengel ,Department of Disaster Management ,Gulf of Bengal ,Fengel Storm ,
× RELATED ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தீவிர இயற்கை...