×

கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகளை டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் ந டத்தி முடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு தேர்வுகள் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது.

புயல் மற்றும் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட மாவட்டங்களில் 23ம் தேதியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டன. அதே நேரத்தில் கீழ் வகுப்புகளுக்கும் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதையடுத்து, 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று வழக்கம் போல பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் சுமார் 13 ஆயிரம் தனியார் பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்பட உள்ளன.

The post கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Christmas ,Chennai ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை...