×

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை கால அட்டவணையில் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை கால அட்டவணையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தையொட்டி இன்று விடுமுறை நாள் அட்டவணைப்படி சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* சென்னையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

* இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், இரவு 8 முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை கால அட்டவணையில் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Christmas ,Christmas festival ,Christmas Day ,Metro Rail Administration ,
× RELATED கிறிஸ்துமஸ் பண்டிகை; சென்னையில் 8,000...