×

காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள 3 யானை தந்தங்கள் பறிமுதல்

சென்னை: திருவள்ளூரில் இருந்து அரண்வாயல் அருகே சொகுசு காரில் யானை தந்தம் கடத்தப்படுவவதாக, சென்னை வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுத் துறைக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வனத்துறை போலீசார், அரண்வாயல் பகுதியில், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை மடக்க முயன்றபோது, கார் நிற்காமல் சென்றது.

இதனையடுத்து போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்றபோது, அந்த கார் திருநின்றவூர் அருகே, சாலையோரத்தில் நடந்து சென்ற முதியவரை இடித்துத் தள்ளியதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மர்ம நபர்கள் திருநின்றவூர், கோமதிபுரம் அரசுப்பள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு தப்பியோடினர். பின்னர் வனத்துறை போலீசார், காரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணை யில், காஞ்சிபுரம் மாவட்டம், இஞ்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் உதயகுமார் (26) என்பது தெரிந்தது. காரில் சோதனை செய்தபோது 3 யானை தந்தங்கள் இருந்தது. 4 கிலோ எடை கொண்ட அந்த தந்தங்களின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும். தந்தங்களை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் உதயகுமாரை கைது செய்தனர். இதில் தப்பியோடிய மேலும் இருவரை தேடி வருகின்றனர். காரில் யானை தந்தங்கள் கடத்தப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள 3 யானை தந்தங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Wildlife Crime Control Department ,Thiruvallur ,
× RELATED திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ விபத்து..!!