×

ஒடிசாவில் மணப்புரம் கோல்டு நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை!!

ஒடிசா: ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் உள்ள மணப்புரம் கோல்டு நிறுவனத்தில் 30 கிலோ தங்கம், ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மணப்புரம் கோல்டு நிறுவனத்தின் 3 ஊழியர்கள், மேலாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு லாக்கர் பாஸ்வேர்டை பெற்று கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை நடைபெறும்போது மணப்புரம் கோல்டு நிறுவனத்துக்கு வெளியே கொள்ளையர்களின் கூட்டாளிகள் காவலுக்கு நின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், மணப்புரம் கோல்டு நிறுவன ஊழியர்களிடமும் போலீசார்! விசாரணை நடைபெற்று வருகிறது.

The post ஒடிசாவில் மணப்புரம் கோல்டு நிறுவனத்தில் 30 கிலோ தங்கம் கொள்ளை!! appeared first on Dinakaran.

Tags : Manapuram Gold Company ,Odisha ,Manapuram Gold ,Sambalpur, Odisha ,Dinakaran ,
× RELATED ஒடிசா சட்டப்பேரவை, மக்களவை...