அதன்படி நாளை பிறக்கவுள்ள 2025ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று? பலரும் இணையங்களில் தேடி வருகின்றனர். தீர்க்கதரிசிகளான பாபா வங்காவும், நாஸ்ட்ராடாமஸும் 2025ம் ஆண்டு குறித்து ஒரே மாதிரியான கணிப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி 2025ம் ஆண்டில் மனிதர்களுடன் வேற்றுகிரகவாசிகள் தொடர்பு கொள்வார்கள். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சிகள் நடக்கும். ஐரோப்பாவில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிக்கும். ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் ஒன்று வெடிக்கும்.
இதன்மூலம் ஐரோப்பிய கண்டத்தின் மக்கள்தொகை வெகுவாக சரியும். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் ரஷ்யா வெற்றிபெறும். உலகை ரஷ்யா ஆளும். அமெரிக்காவின் மேற்கு கடற்கரை உட்பட உலகம் முழுவதும் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும். ஐரோப்பிய கண்டத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கொள்ளைநோய் மீண்டும் வரும். சர்வவல்லமை பொருந்திய சில மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் சரிவடையும். நீண்ட காலமாக தொடரும் போர்கள் முடிவுக்கு வரும் என்று கணித்துள்ளனர்.
The post ஐரோப்பாவில் போர் வெடிக்குமாம்… 2025ம் ஆண்டில் உலகம் எப்படி இருக்கும்? பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு appeared first on Dinakaran.