ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, மீட்டார்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை தமிழ்நாடு மின்வாரியம் ரத்து செய்தது. மிகவும் குறைவான தொகையைக் குறிப்பிட்டு இருந்த அதானி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு நிதியுதவியுடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது. விவசாய இணைப்புகளை தவிர மற்ற இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது.

முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடுக்கப்பட்டிருந்தது. இந்த டெண்டரில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. டெண்டரில் குறைந்த விலை கேட்டு அதானி நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் கோரிய டெண்டர் தொகை மின்வாரிய பட்ஜெட்டிற்கு மிகவும் குறைவாக இருப்பதால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் தொடர்பாக மீண்டும் டெண்டர் விடப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

 

The post ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து: தமிழ்நாடு மின்வாரியம்! appeared first on Dinakaran.

Related Stories: