புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு: காவல் ஆணையர் அருண்!!

சென்னை: ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 ஊர்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுப்ப்டுள்ளனர். மயிலாப்பூர், அடையாறு, பூக்கடை என சுமார் 425 இடங்களில் வாகன தணிக்கை நடத்தப்படும். சாந்தோம், மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு. மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு. முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை உட்புற சாலை இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடல். உட்புற சாலையில் இன்று இரவு 7 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற வேண்டும். போர் நினைவுச்சின்னம் முதல் கலங்கரை விளக்கம் வரை இரவு 8 மணி முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை ஒட்டி சென்னையில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு, குடியிருப்புகளில் நிகழ்ச்சிகள் நடத்த, ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post புத்தாண்டு கொண்டாட்டம்; சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு: காவல் ஆணையர் அருண்!! appeared first on Dinakaran.

Related Stories: