புதுடெல்லி: அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனமும், சிங்கப்பூரின் வில்மர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமும் இணைந்து கூட்டு நிறுவனமாக அதானி வில்மர் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. எப்எம்சிஜி பிரிவு நிறுவனமான அதானி வில்மர் சமையல் எண்ணெய், கோதுமை மாவு, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தனது நிறுவன பங்குகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதானி குழுமம், அதன் ஒருகட்டமாக தற்போது அதானி வில்மர் நிறுவனத்தில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவித்தது.
இதுதொடர்பான அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள குழுமத்திற்கு 44 சதவீத பங்குகள் உள்ளன. இதில் 31.06 சதவீத பங்குகளை வில்மர் நிறுவனம் வாங்கிக் கொள்ள சம்மதித்துள்ளது. மீதமுள்ள 13 சதவீத பங்குகள் திறந்தவெளி பங்கு சந்தையில் விற்கப்படும். இதன் மூலம் அதானி வில்மரில் இருந்து அதானி குழுமம் முழுமையாக வெளியேறும். இந்த பங்கு விற்பனை மூலம் சுமார் ₹17,000 கோடி) நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது’ என கூறி உள்ளது.
The post அதானி வில்மர் நிறுவனத்தில் இருந்து முழுவதுமாக விலகல்: அதானி குழுமம் முடிவு appeared first on Dinakaran.