சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இதையடுத்து ஒரு சவரன் மீண்டும் ரூ.57 ஆயிரத்தை தொட்டது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் அதிடியாக உயர்ந்தது. அக்டோர் மாதம் 31ம் தேதி பவுன் ரூ.59,640க்கு விற்பனையானது. இது தங்கம் வரலாற்றில் அதிகப்பட்ச விலையாகும். அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்த ஏற்றம், இறக்கம் என்பது தொடர்ச்சியாக இந்த மாதமும் நீடித்து வருகிறது. கிறிஸ்துமஸ் நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,100க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,125க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,000க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை மேலும் அதிகரிப்பு மீண்டும் ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை தொட்டது appeared first on Dinakaran.