‘மாசம் ஆயிரம் கொடுத்து அரசு படிக்க வைக்குது’ பொள்ளாச்சி கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது: திருமங்கலத்தை கலக்கும் போஸ்டர்கள்

திருமங்கலம்,: திருமங்கலம் நகர் பகுதியில் அதிமுக – பாஜகவை கிண்டலடித்து பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி, பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணா பல்கலை. மாணவிக்கு நேர்ந்த சம்பவத்தை அரசியலாக்கி வரும் அதிமுக, பாஜகவை கண்டிக்கும்விதமாக நேற்று மதுரை மாவட்டம், திருமங்கலம் நகர் பகுதியில் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் படங்கள் இடம் பெற்றிருந்தன.

அதில், ‘‘மாதம் 1000 கொடுத்து அரசாங்கம் எங்களை படிக்க அனுப்புது… பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது’’ சேவ் கேல்ஸ் எஜிகேசன் (SaveGirlsEducation) என ஒட்டப்பட்டிருந்தது. கீழ் பகுதியில் தமிழ் நாடு மாணவர் மன்றம் மாணவியர் பிரிவு என்ற பெயரில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. திருமங்கலம் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், தேவர்சிலை, உசிலம்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தது.

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று அண்ணா பல்கலை. மாணவி தொடர்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், திருமங்கலம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post ‘மாசம் ஆயிரம் கொடுத்து அரசு படிக்க வைக்குது’ பொள்ளாச்சி கள்ளக்கூட்டணி பயமூட்டி பொண்ணுங்க படிப்பை நிறுத்த பார்க்குது: திருமங்கலத்தை கலக்கும் போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Related Stories: