நெல்லை: திமுகவை ஒழித்து கட்ட ேவண்டும் என கங்கணம் கட்டி கொண்டிருப்பவர்களின் சதி எடுபடாது. மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என்று நெல்லையில் நடந்த நெல்லை கிழக்கு, மத்திய, மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு பேசினார். நெல்லை கிழக்கு, மத்திய, மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், நெல்லையில் இன்று காலை நடந்தது. இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
அதற்கு சாட்சிதான் இந்த கூட்டமாகும். திமுக தொண்டர்கள் குடும்பத்திற்கு நன்மை செய்ய முடியும், உதவ முடியும் என்றால் அதை நான் உங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன். வருகிற தேர்தலில் முதல்வர் விரல் நீட்டுபவரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது, உங்கள் கடமையாகும். முதல்வர், தூத்துக்குடியிலிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி செல்கிறார். அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். திமுகவை ஒழித்து கட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் கங்கணம் கட்டி கொண்டு சதி நோக்கத்துடன் ஒருவர் காலில் செருப்பு போட மாட்டேன் என்கிறார். சாட்டையால் அடித்து கொள்கிறார். ஆனால் இது எதுவுமே நடக்காது.
மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதல்வராவார். அவர்தான் ஆட்சியமைப்பார். அந்த தெம்பையும், இருப்பையும் காட்டுவதாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற வகையில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
The post திமுகவை ஒழித்து கட்ட வேண்டும் என்ற சதி எடுபடாது; மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்: அமைச்சர் கே.என்.நேரு பேச்சு appeared first on Dinakaran.