மண்டபம்,டிச.27: மண்டபம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் மின் கம்பி தாக்கி ஏற்பட்ட விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினற்கு நேற்று எம்எல்ஏ நிதியுதவி வழங்கினார். மண்டபத்தில் அக்.1ம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நாகூர் கனி மகன் சபீத்(9) மீது மின்சார வயர் அறுந்து விழுந்ததில் தீக்காயம் ஏற்பட்டு படும் காயமடைந்தார். அவர் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது வீட்டில் நலமாக உள்ளார். சபீத்தை எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினார்.
அதுபோல மண்டபத்தில் நவ.26ம் தேதி மின் கசிவு ஏற்பட்டு மீனவர் அம்ஜத் கான் வீடு எரிந்து நாசமாயின. தீப்பற்றி எரிந்த வீட்டினை எம்எல்ஏ பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து வாழ்வாதாரத்தை இழந்து நின்ற குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மேலும் அரசு திட்டத்தில் புதிய வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டபம் பேரூர் திமுக செயலாளர் அப்துல் ரகுமான் மறைக்காயர், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் வாசிம் அக்ரம், சாதிக்பாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post மின்கசிவால் வீடு இழந்த குடும்பத்திற்கு எம்எல்ஏ நிதியுதவி appeared first on Dinakaran.