ஆன்லைனில் மட்டுமே காளைகள், வீரர்கள் முன்பதிவு: மதுரை ஆட்சியர் சங்கீதா தகவல்

மதுரை: ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் காளைகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு விழாவுக்கு முன் அனுமதி பெற வேண்டும்; 8 அடிக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளைகள், வீரர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட வேண்டும்; சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என மதுரை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post ஆன்லைனில் மட்டுமே காளைகள், வீரர்கள் முன்பதிவு: மதுரை ஆட்சியர் சங்கீதா தகவல் appeared first on Dinakaran.

Related Stories: