சாத்தான்குளம், டிச. 27: சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் ஊராட்சி பகுதியில் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ஆனந்தன் ஆய்வு மேற்கொண்டார். கிராமம் முழுவதும் நடந்து வரும் சுகாதார பணிகள் மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். தண்ணீரில் பரவும் கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் தண்ணீரில் குளோரினேசன் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார். தற்போது பெய்து வரும் மழை காரணமாக காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். டெங்கு மஸ்தூர் பணியாளர்கள், ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. அப்போது மீரான்குளம் ஊராட்சி செயலாளர் ஞானசெல்வி, சுகாதார ஆய்வாளர் அஸ்வின் ஆகியோர் உடனிருந்தனர்.
The post மீரான்குளத்தில் சுகாதார பணிகள் பூச்சியியில் வல்லுநர் ஆய்வு appeared first on Dinakaran.