உக்ரைன் – ரஷ்யா போரில் உயிரிழந்த உ.பி. இளைஞரின் உடல் 6 மாதங்களுக்கு பின் இந்தியா வந்தது

அசாம்கர்: உத்தரபிரதேச மாநிலம் பங்கடா கிராமத்தை சேர்நத கன்ஹையா யாதவ்(41) ஏஜென்ட் ஒருவர் மூலம் பணி விசா பெற்று கடந்த ஜனவரி 16ம் தேதி ரஷ்யா சென்றார். ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து சமையல் வேலை செய்து வந்தார். பின்னர் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்ட கன்ஹையா , உக்ரைன் – ரஷ்யா போரின்போது மே 9ம் தேதி பலத்த காயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூன் 17ம் தேதி உயிரிழந்தார். கன்ஹையா யாதவ் உயிரிழந்தது குறித்து ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரகம் கடந்த 6ம் தேதி, யாதவின் குடும்பத்தினருக்கு தெரிவித்தது. இதையடுத்து அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹையா யாதவின் உடல் கடந்த திங்கள்கிழமை(22ம் தேதி) இந்தியா கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

The post உக்ரைன் – ரஷ்யா போரில் உயிரிழந்த உ.பி. இளைஞரின் உடல் 6 மாதங்களுக்கு பின் இந்தியா வந்தது appeared first on Dinakaran.

Related Stories: