கர்நாடக பாஜ எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல்

பெங்களூரு: பெங்களூரு, நந்தினி லே அவுட் போலீஸ் சரகம் லட்சமி தேவிநகர் பாஜ அலுவலகத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான முனிரத்னா காரில் வந்துள்ளார். அங்கிருந்து நடிகர் ராஜ்குமார் சமாதி அருகே ஊர்வலமாக முனிரத்னா வந்த போது அவர் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் முட்டையும் வீசப்பட்டது. இது அவரின் தலை மீது விழுந்து உடைந்தது. இந்த சம்பவத்தில் முனிரத்னா தலையில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முனிரத்னா, தர்ணா போராட்டம் நடத்தினார். இது குறித்து அவர் கூறுகையில், என் மீது நடந்த தாக்குதல் நடத்தியவர் களை போலீசார் கைது செய்ய வேண் டும் என்றார்.

The post கர்நாடக பாஜ எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: