இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வருகிற 27ம் தேதி அமித்ஷா சென்னை வருகிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். மறுநாள்(28ம் தேதி) திருவண்ணாமலை செல்கிறார். அங்கு கட்டப்பட்டுள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தை அவர் திறந்து வைக்கிறார். அங்கிருந்தபடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலகங்களை அவர் திறந்து வைக்க உள்ளார். மேலும் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்து டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினம் கருப்பு கொடி ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். மேலும் அன்றைய தினம் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமித்ஷா வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், அவர் தங்கும் ஓட்டல் மற்றும் திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
The post நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து விமர்சித்த நிலையில் அமித்ஷா வரும் 27ம் தேதி தமிழகம் வருகை: காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பரபரப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.