இதுபற்றி தேர்தல் ஆணையம் நேற்று பதில் அளித்துள்ளது. அதில், ‘மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல் உள்ளிட்ட பணிகள் எதுவும் தன்னிச்சையாக நடைபெறவில்லை. மேலும் மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை இறுதி வாக்குப்பதிவுத் தரவுகளுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது. ஏனெனில் மாலை 5 மணி நிலவரம், இரவு 11:45 மணிக்கு அதிகரிப்பது இயல்பானது.
வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில், வாக்காளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய சட்டப்பூர்வ படிவம் 17சி இருப்பதால், பூத்களில் பதிவான உண்மையான வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமில்லை. மேலும் ஜூலை முதல் நவம்பர் வரையிலான 50 சட்டப்பேரவை தொகுதிகளில் சராசரியாக 50,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். அதில் 47 தொகுதியில் பா.ஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்ற புகார் உண்மையில் தவறானது. இந்த காலகட்டத்தில் 6 பேரவை தொகுதிகளில் மொத்தம் 50,000 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை’ என்று பதில் அளித்துள்ளது.
The post மகாராஷ்டிரா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எப்படி மாற்ற முடியும்?: காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி appeared first on Dinakaran.