200 தொகுதிகளில் பாஜ டெபாசிட் பறிபோகும்: துரை வைகோ கிண்டல்


திருச்சி: தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திருச்சி தொகுதி மதிமுக எம்பி துரை.வைகோ இன்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பெரியார் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை, பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் ஆலயத்திற்கு உள்ளே சென்று கடவுளை வழிபடுகிறார்கள் என்றால், அந்த கேட் பாஸ் கொடுத்தது பெரியார் தான்.

திமுக கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது. மக்கள் திமுக பக்கம் இருக்கிறார்கள். 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது, அவரது கட்சிக்காக இருக்கும். அதிகாரியாக இருந்தவர் பொய் சொல்ல மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

The post 200 தொகுதிகளில் பாஜ டெபாசிட் பறிபோகும்: துரை வைகோ கிண்டல் appeared first on Dinakaran.

Related Stories: