தற்போது வழக்கமாக ஜனவரி மாதம் முட்டையிட வரும் ஆமைகள் ஒரு வாரம் முன்னதாகவே புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, மணியன்தீவு பகுதிகளுக்கு வர துவங்கியுள்ளது. இந்த கடற்கரை பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளேயும், வெளியேயும் சேறு நிறைந்திருப்பதால் முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி அவ்வப்பொழுது இறந்து கரை ஒதுங்குகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வேதாரண்யம் கடற்கரையில் மூன்று ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஓதுங்கியது.
இறந்து கரை ஒதுங்கிய இந்த ஆமைகளை, கோடியக்கரை வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் இளஞ்செழியன் மற்றும் வனத்துறையினர் எடுத்து புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆலிவர் ரெட்லி ஆமைகள் பல்லாயிரம் கி.மீ கடந்து வேதாரண்யம் கோடியக்கரை கடல் பகுதிக்கு முட்டையிட வருகின்றது. அவ்வாறு வரும் ஆமைகள் மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது வலையில் சிக்கினால் அதை பத்திரமாக எடுத்து மீண்டும் கடலில் விட வேண்டும் என்றனர்.
The post வேதாரண்யம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் appeared first on Dinakaran.