இதை கிண்டலடிக்கும் விதமாக, பிரபல சினிமா நடிகரான கூல் சுரேஷ் நேற்று மாலை தன் பங்குக்கு நடத்திய சாட்டையடி போராட்டம் தற்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், நடிகர் கூல் சுரேஷ், தனது நெத்தியில் பெரிய அளவில் குங்குமம் வைத்து கொண்டு, சட்டையை இடுப்பில் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக,
கையில் சினிமா புகைப்பட அட்டையை வைத்து கொண்டு, ‘திருமாணிக்கம்…….திருப்பதி பிரதர்ஸ்…….போஸ்……… டைரக்டர் லிங்குசாமி…… திருப்பதி பிரதர்ஸ்….. என திரும்ப….திரும்ப… கூவிக்கொண்டு தனக்கு தானே சரமாரியாக சாட்டையால் அடித்து கொண்டு போராட்டம் நடத்தினார். சினிமா விளம்பரத்துக்காக கூல் சுரேஷ் இதை செய்திருந்தாலும், அண்ணாமலையை சரி கலாய் செய்யும் விதமாக அமைந்திருந்ததை பலரும் ரசித்தனர். டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இதை பலரும் பதிவிட்டனர்.
The post அண்ணாமலையை கலாய்த்து கூல் சுரேஷ் சாட்டையடி: சமூகவலைத்தளங்களில் வைரல் appeared first on Dinakaran.