மன்மோகன்சிங் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றியவர்: கனிமொழி எம்பி பேட்டி

சென்னை: மறைந்த மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, கனிமொழி எம்பி நேற்று காலை விமானத்தில், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மன்மோகன்சிங் மிகப்பெரிய ஜனநாயகவாதி. பொருளாதார நிபுணர். உலக பொருளாதாரம் சரிந்து கொண்டிருந்த நேரத்தில் கூட, இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்தி, காப்பாற்றியவர். அவரது மறைவு நாட்டிற்கு மிகப்பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post மன்மோகன்சிங் இந்திய பொருளாதாரத்தை காப்பாற்றியவர்: கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: