திருவள்ளுவருக்கு மரியாதை

 

சிவகங்கை, டிச.24: சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் உருவப்படம் திறக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளி விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக மாவட்ட மைய நூலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித், திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார், நூலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன், வாசகர் வட்டத்தலைவர் அன்புத்துரை, தன்னார்வலர்கள் நல்லாசிரியர் கண்ணப்பன், எழுத்தாளர் ஈஸ்வரன், முத்து, கண்ணன், ரமேஷ்கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

 

The post திருவள்ளுவருக்கு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: