* உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, துறைமுகம் தொகுதி பொறுப்பாளர் நரேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம், ஆசாத், வட்ட செயலாளர்கள் திமுகவினர் ஏராளமானவர் கலந்துகொண்டனர்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் முன்னாள் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ரா.செல்வம் தலைமை வகித்தார். வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் உஷாராணி, மாமன்ற உறுப்பினர் அம்பேத் வளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தனர்.
வேளச்சேரி: புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மேடவாக்கம் பேருந்து நிலையம் அருகே, ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பரங்கிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், முன்னோடிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
The post அமித்ஷாவை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.