ஊத்தங்கரையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை, டிச.24: ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடத்தினர். ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய இந்த ஊர்வலம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால் முருகன், செயலாளர் ஷோபா திருமால்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்வலத்தை எஸ்ஐக்கள் சாந்தசீலன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

The post ஊத்தங்கரையில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: