எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர ஆய்வு காவலர் பதிவேடுகளை பார்வையிட்டார்

சேலம், டிச.17: சேலம் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் நேற்று, வருடாந்திர ஆய்வு பணியை தொடங்கினார். 2 நாட்கள் முகாமிட்டு இந்த ஆய்வை ஐஜி நடத்துகிறார். இதற்காக அவர் நேற்று காலை சேலம் எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார். அவர் நேரடியாக காவலர்களுக்கான ஸ்டோருக்கு சென்று, சீருடை, பெல்ட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவது குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், தூய்மை பணிக்கான பொருட்கள் சரிவர உள்ளதா? என பார்வையிட்டார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பணியாற்றி வரும் காவலர்களுக்கான பணி விபர பதிவேடுகள், ஒழுங்கு நடவடிக்கை பதிவேடு, இடமாறுதல் உத்தரவுகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என ஆவணங்களை பார்த்து ஐஜி செந்தில்குமார் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட எஸ்பி கொளதகோயல், அலுவலக சூப்பிரண்டுகள் உடனிருந்தனர். இன்று காலை, குமாரசாமிபட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறையின் பயன்பாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் ஐஜி ஆய்வு செய்யவுள்ளார்.

The post எஸ்.பி., அலுவலகத்தில் ஐஜி வருடாந்திர ஆய்வு காவலர் பதிவேடுகளை பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Related Stories: