வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சேலம், டிச.24: சேலம் இரும்பாலை பக்கமுள்ள மாரமங்கலத்துப்பட்டி ஓம்சக்திநகரை சேர்ந்தவர் பாஸ்கர்(51). இவர் கடந்த 20ம்தேதி குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். வீட்டின் சாவியை பக்கத்து வீட்டை சேர்ந்த உறவினரான விஜயலட்சுமியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நேற்றுமுன்தினம் ஊர் திரும்பிய நிலையில், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த இரண்டரை பவுன் நகை, ₹15ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: