நெல்லை நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.ஐ தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான பாதுகாப்புடன் 4 துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லை நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் புதிதாக 3 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தை சுற்றியுள்ள சாலைகளில் 5 ரோந்து பைக்குகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post நெல்லை நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: