7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலை உள்ளதை குறிக்கும் வகையில் 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தியுள்ளது. வடதமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் கூறப்படுகிறது.

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வறண்ட காற்றின் ஊடுருவலால் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு இழந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதிகளை நோக்கி நாளை வந்தடையும்.

தொடர்புடைய சூறாவளி சுழற்சி சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ வரை நீண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் தாக்கத்தால் அடுத்த 3 நாட்களுக்கு 26ம் தேதி காலை வரை காற்றின் வேகம் மணிக்கு 35 கிமீ முதல் 45 கிமீ வேகத்தில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் வட கடலோர தமிழ்நாட்டின் துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவக்கூடும்.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 25, 26-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழையும், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதவிர, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்காலிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் 25-ந்தேதி லேசான மழைக்கும், 26, 27-ந்தேதிகளில் மிதமானது முதல் கனமழைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

The post  7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: