இதில் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் (26) செல்போன் எண்ணும் இருந்தது. இதனையடுத்து, நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். இந்நிலையில் கைதான அலிகான் துக்ளக் உட்பட 7 பேர் சென்னை அம்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 7 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில், மன்சூர் அலிகானின் மகன் துக்ளக் அலிகான் ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். போதைப்பொருள் கடத்தல் வழக்கிற்கும் தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
The post போதைப்பொருள் வழக்கில் மன்சூர் அலிகான் மகன் கோரிய ஜாமீன் மனு நாளை விசாரணை appeared first on Dinakaran.