ஜெயங்கொண்டம், டிச.20: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெயங்கொண்டம் நகர திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச்செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமை வகித்தார். இதில் திமுகாவினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் சட்ட திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், தேர்தல் நகர பொறுப்பாளர் .பொய்யாமொழி, ஒன்றியச்செயலாளர் தனசேகர், பாலசுப்பிரமணியன், நகர அவை தலைவர் ஞானபிரகாசம், நகர துணைச்செயலாளர் முரசொலிகுமார், செந்தில்குமார், நிர்மலா செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் ராஜமாணிக்கம், கொளஞ்சியப்பா, பிரபாகரன், கண்ணன், விஜயன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
The post ஜெயங்கொண்டத்தில் அமித்ஷாவை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
