நெல்லை, டிச.20: நெல்லை அருகேயுள்ள தாழையூத்தை சேர்ந்த சுகுமார் மகன் தீபன்கார்த்திக் (43). இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் கடந்த சில மாதங்களாக உறவினர் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 14ம் தேதியன்று உடல் நல குறைவாக இருந்த உறவினரை பார்ப்பதற்காக அவர் குடும்பத்துடன் அங்கு சென்றார். பின்னர் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் வீட்டின் பீரோவிலிருந்த 5 பவுன் நகை மாயமாகிருந்து தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் ஆகும்.இதுகுறித்து தாழையூத்து காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் தீபன்கார்த்திக் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்து ஆய்வு நடத்தி விசாரித்து வருகின்றனர்.
The post அரசு டாக்டர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.