வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு

அரூர், டிச.19: கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக, தர்மபுரி மாவட்டத்தில் அரூர், மொரப்பூர், கம்பை நல்லூர், தீர்த்தமலையில் கனமழை பெய்தது. இதில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தென்பெண்ணையாற்றில் அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. அந்த நீரில் பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று அடித்து வரப்பட்டு, தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய மேல்செங்கப்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தது. நேற்று காலை வேலைக்கு சென்றவர்கள் மலைப்பாம்பை பார்த்து, தீர்த்தமலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் 13 அடி நீள மலைப்பாம்பை பிடித்து சென்று, அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

The post வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு appeared first on Dinakaran.

Related Stories: