அரூர், டிச.19: அரூர் மேல்பாட்சாபேட்டையை சேர்ந்தவர் நவ்ஷாத்(50), இவர் அரூர் மின்வாரிய அலுவலகம் எதிரில், ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது கடைக்கு வந்த அரூரை சேர்ந்த 13 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள், தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளனர். நவ்ஷாத் பிரிட்ஜில் உள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்து வரச் சென்றபோது, சிறுவர்கள் இருவரும் மர டிராவில் வைத்திருந்த ₹21 ஆயிரத்தை திருடிக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதுகுறித்து நவ்ஷாத் அளித்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர்.
The post ஓட்டலில் ₹21 ஆயிரம் திருடிய சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.