சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி தீவிரம்: நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் இயங்கும்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 1,305 படிகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் சிறப்புமிக்க இக்கோயிலில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். முதியவர்கள் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக இக்கோயிலில் ரோப்கார் சேவை இயங்கி வருகிறது. இதில் மலைக்கு செல்ல ரூ.50, மலையில் இருந்து திரும்பி வர ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ரோப் கார் வசதி ஏற்பட்ட பிறகு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாதந்தோறும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல் நாளை வரை ரோப்கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து ரோப் காரை இயக்கும் மோட்டார், பற்சக்கரங்கள், ஷாப்டுகள், கம்பி வடம், பெட்டிகள் மற்றும் டவர் உள்ளிட்டவற்றை பராமரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நாளை நிறைவடையும். நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் ரோப் கார் சேவை இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் பராமரிப்பு பணி தீவிரம்: நாளை மறுநாள் முதல் வழக்கம்போல் இயங்கும் appeared first on Dinakaran.

Related Stories: