இரவு 9.30 மணியளவில் அல்லு அர்ஜுன், அவரது மனைவி மற்றும் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். இதை அறிந்த ரசிகர்கள், அல்லு அர்ஜுனை காண திரையரங்கிற்குள் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார். அவரது மகன் தேஜா (9) தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிக்கட்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நடிகர் ஒருவர் தான் காரணம் என கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் அச்சிறுவன் மூளைச்சாவு அடைந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கடந்த 14 நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கூட்ட நெரிசலில் சிக்கி தாய் உயிரிழந்த நிலையில் தற்போது மகனும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்.. ‘புஷ்பா 2’ கூட்டநெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த 8 வயது சிறுவன் மூளைச்சாவு!! appeared first on Dinakaran.