போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்யப்படுவதாக, புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சிபுகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் புளியந்தோப்பு ஆடுதொட்டி அருகே 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 80 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் பாங்கு எனப்படும் போதைப்பொருள் 8 பாக்கெட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், புளியந்தோப்பு தாஸ் நகரை சேர்ந்த சிவகுமார் (19), அயனாவரத்தை சேர்ந்த சூர்யா (22), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பரத் (19), வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் (23) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்தனர்.

 

The post போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: